மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குமேற்கு வங்கம்: மமதா ஆதரவு எம்எல்ஏ காா் மீது மீண்டும் தாக்குதல்! பொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்களைப் பெற விதிக்கப்பட்ட விலக்கு வாபஸ்பட்டாசு விலை 25% உயர்வு

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 15000 ரன்களைக் கடந்து விராட் கோலி சாதனை!

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 15000 ரன்களைக் கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

Virat Kohli

விராட் கோலி - படம் | பிசிசிஐ

Published On :

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 15000 ரன்களைக் கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று (செப்டம்பர் 27) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, 41.4 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தினர். விராட் கோலி 139* ரன்கள் (88 பந்துகள்) மற்றும் ஷுப்மன் கில் 110 ரன்கள் (108 பந்துகள்) எடுத்தனர்.

அதிவேகமாக 15000 ரன்களைக் கடந்து சாதனை!

இன்றையப் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 15000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். மேலும், அதிவேகமாக 15000 ரன்களைக் கடந்த வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இதுவரை இந்திய அணிக்காக 315 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 15080 ரன்கள் குவித்துள்ளார். இன்றையப் போட்டியில் அவர் விளாசிய சதம் ஒருநாள் போட்டிகளில் விளாசும் 55-வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Virat Kohli has set a record by becoming the fastest to cross 15,000 runs in One Day Internationals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER