
ஆபத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள்; முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளை முறியடிக்க காத்திருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி - ANI
இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளை முறியடிக்க காத்திருக்கிறார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (செப்டம்பர் 27) திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் பல்வேறு சாதனைகள் படைக்க காத்திருக்கிறார். குறிப்பாக, இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளையும் முறியடிக்க காத்திருக்கிறார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நாளை நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் 59 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 15000 ரன்கள் குவித்து சாதனை படைப்பார். இந்த சாதனையை படைக்கும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமை விராட் கோலியைச் சேரும். ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். தற்போது, விராட் கோலி 14,941 ரன்களுடன் அந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசியுள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க, விராட் கோலிக்கு இன்னும் இரண்டு சதங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 60 சதங்கள் விளாசியுள்ள நிலையில், விராட் கோலி 59 சதங்கள் விளாசியுள்ளார்.
சொந்த மண்ணில் அதிக சதங்கள் விளாசியுள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் விராட் கோலி முறியடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சொந்த மண்ணில் இதுவரை சச்சின் டெண்டுல்கர் 42 சதங்கள் விளாசியுள்ள நிலையில், விராட் கோலி 41 சதங்கள் விளாசியுள்ளார். இன்னும், இரண்டு சதங்கள் விளாசினால் சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனையை விராட் கோலி முறியடிப்பார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் விராட் கோலி 110 ரன்கள் எடுக்கும்பட்சத்தில், ஒருநாள் போட்டிகளில் சொந்த மண்ணில் அதிக ரன்கள் குவித்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடிப்பார். சச்சின் டெண்டுல்கர் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 6976 ரன்கள் எடுத்துள்ள நிலையில், விராட் கோலி 6867 ரன்கள் எடுத்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இதுவரை 43 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 2261 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 9 சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் அடங்கும்.
Summary
Virat Kohli, one of the senior players of the Indian team, is poised to break several of Sachin Tendulkar's records.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






