புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

Joe root

ஜோ ரூட் - படம் | AP

Published On :

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பேஸ்டனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. மேலும், 3 போட்டிகள் கொண்ட தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.

இரண்டாவது இன்னிங்ஸில் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 24.2 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பென் டக்கெட் மற்றும் எமிலியோ கே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதன் பின், ஜோர்டான் காக்ஸ் மற்றும் கேப்டன் ஜோ ரூட் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தனர். ஜோ ரூட் 62 ரன்களுடனும், ஜோர்டான் காக்ஸ் 59 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் விளாசியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக அரைசதங்கள் விளாசியுள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 68 அரைசதங்கள் எடுத்துள்ள நிலையில், ஜோ ரூட் 69 அரைசதங்கள் விளாசி அவரது சாதனையை முறியடித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் எடுத்துள்ள வீரர்கள்

ஜோ ரூட் - 69 அரைசதங்கள்

சச்சின் டெண்டுல்கர் - 68 அரைசதங்கள்

சந்தர்பால் - 66 அரைசதங்கள்

ஆலன் பார்டர் - 63 அரைசதங்கள்

ராகுல் டிராவிட் - 63 அரைசதங்கள்

ரிக்கி பாண்டிங் - 62 அரைசதங்கள்

Summary

England captain Joe Root has broken Sachin Tendulkar's record in Test cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.