நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புகுடியரசுத் தலைவா் ஒப்புதல்! தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா சட்டமானது!ஆக. 4 முதல் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு
/

மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள பிளெமிங்தான் காரணம்: ஜோ ரூட்

இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொள்ள ஸ்டீஃபன் பிளெமிங்தான் காரணம் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

News image

ஜோ ரூட் (கோப்புப் படம்) - படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :2 ஆகஸ்ட் 2026, 12:12 pm IST

இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொள்ள ஸ்டீஃபன் பிளெமிங்தான் காரணம் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பென் ஸ்டோக்ஸ் அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீஃபன் பிளெமிங்கும், கேப்டனாக ஜோ ரூட்டும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொள்ள ஸ்டீஃபன் பிளெமிங்தான் காரணம் என ஜோ ரூட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேர்மையாகக் கூறவேண்டுமென்றால், ஸ்டீஃபன் பிளெமிங் இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதுதான் நான் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மிகப் பெரிய காரணமாக அமைந்தது. அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்.

ஒரு வீரராகவும், தலைமைப் பயிற்சியாளராகவும் பிளெமிங் பல அற்புதமான விஷயங்களை செய்துள்ளார். அவரிடம் பரந்த அனுபவம் இருக்கிறது. அவருடன் இணைந்து இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக செயல்பட காத்திருக்கிறேன் என்றார்.

Summary

Joe Root has stated that Stephen Fleming is the reason he accepted the England captaincy again.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.