கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரருக்கு காயம்; சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரருக்கு காயம் ஏற்பட்டது.

News image

படம் | AP

Updated On :4 ஜனவரி 2025, 11:01 am

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சைம் ஆயூபுக்கு காயம் ஏற்பட்டது.

பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஃபீல்டிங்கின்போது, பந்தை தடுக்க முயன்ற சைம் ஆயூபுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக பெவிலியன் திரும்பிய அவர் மீண்டும் ஃபீல்டிங்குக்கு வரவில்லை.

இந்த நிலையில், சைம் ஆயூபுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டிருப்பதை உறுதிப்படுத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், அவர் 6 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

6 வாரங்கள் கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இம்மாத இறுதியில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியில் அவர் இடம்பெறமாட்டார். அதேபோல, சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் நடைபெறும் முத்தரப்பு தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.

டெஸ்ட் போட்டிகளில் சைம் ஆயூபுக்குப் பதிலாக இமாம் உல் ஹக்கும், ஒருநாள் போட்டிகளில் ஃபகர் ஸமானும் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கும் நிலையில், சைம் ஆயூபுக்கு காயம் ஏற்பட்டுள்ளது அந்த தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக, காயத்திலிருந்து குணமடைந்து சைம் ஆயூப் முழு உடல் தகுதி பெறும் பட்சத்தில், அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.