இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

போலண்ட் 4 விக்கெட்டுகள்: இந்தியா 145 ரன்கள் முன்னிலை!

சிட்னி டெஸ்ட்டில் 2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 145 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

News image
விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய போலண்ட். - படம்: ஏபி
Updated On :4 ஜனவரி 2025, 7:15 am

DIN

சிட்னி டெஸ்ட்டின் 2ஆம் நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 145 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

பார்டர் - கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 185க்கு ஆல் அவுட்டாக ஆஸி. 181க்கு ஆல் அவுட்டானது.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 2ஆம் நாள் முடிவில் 32 ஓவர்கள் விளையாடி 141/6 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 4 ரன்கள் கூடுதலாக இருந்ததால் இந்திய அணி 145 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.

இந்திய அணியின் ஸ்கோர் கார்ட்

ஜெய்ஸ்வால் - 22

கே.எல்.ராகுல் - 13

ஷுப்மன் கில் - 13

விராட் கோலி - 6

ரிஷப் பந்த் - 61

ரவிந்திர ஜடேஜா - 8*

நிதீஷ் ரெட்டி - 4

வாஷிங்டன் சுந்தர் - 6*

ஆஸி. அணி 2-1 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி இந்தப் போட்டியில் வென்றால் 2-2 என தொடர் சமநிலையில் முடியும். பிஜிடி தொடரும் இந்தியாவின் வசம் தக்கவைக்கப்படும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கும் இந்தியாவுக்கு வாய்ப்பிருக்கிறது. இதில் தோல்வியுற்றால் அனைத்துமே இந்திய அணி இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.