2015-ல் ரசிகன்..! 2025-ல் பிக்-பாஸ் லீக் ஆட்டநாயகன்! யார் இந்த மிட்செல் ஓவன்?

பிக்-பாஸ் லீக்கில் முதல் பட்டத்தை வென்று கொடுத்த மிட்செல் ஓவனைப் பற்றி...
மிட்செல் ஓவனின் பழைய புகைப்படம் மற்றும் தற்போதைய புகைப்படம்.
மிட்செல் ஓவனின் பழைய புகைப்படம் மற்றும் தற்போதைய புகைப்படம்.
Published on
Updated on
2 min read

பிக் பாஸ் தொடரில் 14-வது சீசனின் இறுதிப் போட்டியில் அதிவேக சதம் விளாசியதுடன் முதல் முறையாக ஹூபர்ட் ஹரிகேன்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கும் உறுதுணையாக இருந்தார் மிட்செல் ஓவன்.

39 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசிய மிட்செல் ஓவன் 10 ஆண்டுகளுக்கு முன்னதாக, ஹூபர்ட் அணிக்கு ஆதரவாக ரசிகர்களுடன் மைதானத்தில் இருக்கும் அப்போதைய மற்றும் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சிட்னி தண்டர்ஸ் மற்றும் ஹூபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிகள் மோதிய பிக்-பாஸ் லீக்கின் இறுதிப் போட்டி திங்கள்கிழமை பெல்லேரிவ் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இதையும் படிக்க |12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஞ்சி டிராபியில் விராட் கோலி; தில்லி அணி அறிவிப்பு!

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிட்னி அணி 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஹூபர்ட் அணியில் ஆட்டம் தொடங்கியது முதலே பவுண்டரி மழை பொழிந்த மிட்செல் ஓவன் 39 பந்துகளில் சதம் விளாசி அனைவரையும் வியக்க வைத்தார். மேலும், 42 பந்துகளில் 11 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

14.1 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்து ஹூபர்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியது.

ஒரே நாளில் உலக பிரபலமான மிட்செல் ஓவன் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திலும் பதிவு செய்திருந்தார். இருப்பினும் அவரது பெயர் இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை.

இதையும் படிக்க | இலங்கை தொடர்: தொடக்க வீரர்களாக கவாஜா, டிராவிஸ் ஹெட்!

பிக் பாஸ் லீக்கில் அதிகவேக சதங்கள்

  • மிட்செல் ஓவன் -39 பந்துகள்

  • கிரெய்க் சிம்மோன்ஸ் -39 பந்துகள்

  • கிளென் மேக்ஸ்வெல் - 41 பந்துகள்

  • ஜோஸ் பிரௌன் - 41 பந்துகள்

யார் இந்த மிட்செல் ஓவன்?

டாஸ்மேனியாவைச் சேர்ந்த பேட்டரான மிட்செல் ஓவன் 2021 ஆம் ஆண்டு பிக் பாஸ் லீக்கில் அறிமுகமானார். ஆனால், அவரால் தொடர்ந்து ரன் குவிக்க முடியவில்லை. இருப்பினும், 2024 - 25 ஆம் ஆண்டுக்கான பிக் பாஸ் லீக்கில் 11 போட்டிகளில் 2 சதங்களுடன் 452 ரன்கள் குவித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு டாஸ்மேனியா அணியில் ஒப்பந்தம் பெற்ற மிட்செல் ஓவன் 19 வயதுக்குள்பட்டோருக்கான அணியில் 60 சராசரியுடன் 415 ரன்கள் குவித்தார். இதன் தொடர்ச்சியாக அவருக்கு முதல் தரப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. லிஸ்ட் ஏ போட்டியில் 2021 ஆம் ஆண்டு டாஸ்மேனியாவுக்காகவும் 2023 ஆம் ஆண்டு தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் தரப் போட்டியிலும் விளையாடினார்.

இவர் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தால், அவருக்கு ஐபில் போன்ற தொடர்களிலும் அதிக தொகைக்கு ஏலத்தில் போக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | வாழ்வா? சாவா? போட்டிக்கான மும்பை அணி அறிவிப்பு; ரோஹித் சர்மா அணியில் இல்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.