
இலங்கையிலுள்ள காலேவில் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி நாளைமுதல் (ஜன.29) விளையாடவிருக்கிறது. இதில் கான்ஸ்டாஸுக்குப் பதிலாக டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக கவாஜா உடன் களமிறங்குவாரென கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
பிஜிடி தொடரில் ஆஸி. 3-1 என வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.
கம்மின்ஸுக்குப் பதிலாக ஸ்மித் கேப்டனாக செயல்படுகிறார். இந்தத் தொடரில் சாம் கான்ஸ்டாஸுக்குப் பதிலாக டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக களமிறங்குவாரென கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
பிஜிடி தொடரில் அறிமுகமான கான்ஸ்டாஸ் முதல் போட்டியில் அரைசதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்மித் கூறியதாவது:
டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக விளையாடுவார். அதனால் அணியில் சமநிலை மாறாது. இதை மாற்றுவதால் பெரிதாக எதுவும் பாதிக்கப்படபோவதில்லை என நினைக்கிறேன்.
இந்தியாவில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் டிராவிஸ் ஹெட் தொடக்கத்தில் என்ன செய்தார் என்ன செய்தார் என்பதை தேர்வுக்குழுவினர் ரசித்திருப்பார்கள். ஹெட் புதிய பந்தில் வேகமாக ரன்களை குவித்து எதிரணியை அழுத்தத்தில் உள்படுத்துவார். அதனால், இங்கும் அது நடக்குமென எதிர்பார்க்கிறேன் என்றார்.
முதல் டெஸ்ட் ஜன.29ஆம் தேதியும் இரண்டாவது டெஸ்ட் பிப்.6ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. அதற்கடுத்து 2 ஒருநாள் போட்டிகள் விளையாடவிருக்கிறார்கள்.