
ஆஸி. வீரர் ஜோஷ் இங்கிலிஷ் தனது அறிமுகப் போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார்.
காலேவில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட்டின் இரண்டாம் நாளில் ஆஸி. அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
பிஜிடி தொடரில் 15 நபர்கள் கொண்ட அணியில் தேர்வானாலும் பிளேயிங் லெவனில் ஆட இடம் கிடைக்கவில்லை. பிஜிடியில் விளையாடிய நாதன் மெக்ஸ்வீனி, சாம் கான்ஸ்டாஸுக்கு இந்தப் போட்டியில் களமிறக்கப்படவில்லை.
இவர்களுக்குப் பதிலாக களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஷ் சிறப்பாக விளையாடி 94 பந்துகளில் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடங்கும்.
அறிமுகப் போட்டியில் சதமடித்தவர்கள் பட்டியலில் இங்கிலிஷ் இணைந்துள்ளார்.
அறிமுகப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த ஆஸி. வீரர்கள் பட்டியலில் 3ஆம் இடம் பிடித்துள்ளார். மேலும் வேகமாக சதமடித்த 2ஆவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இவர்களது பெற்றோர்கள் இவருக்கு பறக்கும் முத்தங்கள் அளித்த விடியோ வைரலாகி வருகிறது.
ஆஸி. அணி 136 ஓவர்கள் முடிவில் 577/5 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் அலெக்ஸ் கேரி, பியூ வெப்ஸ்டர் விளையாடி வருகிறார்கள்.