காலே டெஸ்ட்: மழையால் 3ஆம் நாள் ஆட்டம் நிறுத்தம்..!

இலங்கை- ஆஸி. முதல் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் மழையினால் பாதிக்கப்பட்டிருக்கிறது.
காலே திடல் மழையினால் பாதிப்பு...
காலே திடல் மழையினால் பாதிப்பு...படம்: ஏபி
Updated on
1 min read

இலங்கையில் நடைபெறும் ஆஸி. முதல் டெஸ்ட் போட்டி மழையினால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

வார்னே -முரளிதரன் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி ஜன.29ஆம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸி. அணி 654/6 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

அடுத்து விளையாடிவரும் இலங்கை அணி 3ஆம் நாளின் உணவு இடைவேளை வரையில் 136/5 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

மழையின் காரணமாக 3ஆம் நாள் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 2 நாள்களில் இலங்கையை ஆல் அவுட்டாக்கி மீண்டும் ஒருமுறை ஆல் அவுட் செய்தால்தான் ஆஸ்திரேலியா வெற்றிபெற முடியும்.

இதைச் செய்ய தவறினால் இந்தப் போட்டி டிராவில் முடிவடையும். இதனால் உலக டெஸ்ட் போட்டி பட்டியயில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாவிட்டாலும் எளிதாக வெல்ல வேண்டிய போட்டியை மழையினால் இழப்பது ஆஸி. அணிக்கு பின்னடைவுதான் என வர்ணணையாளர்கள் கூறியுள்ளார்கள்.

42 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 136/5 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் தினேஷ் சண்டிமல் (63), குசால் மெண்டிஸ் (10) இருக்கிறார்கள்.

ஆஸி. சார்பில் மிட்செல் ஸ்டார்க், குன்னஹ்மென் தலா 2 விக்கெட்டுகளும் நாதன் லயன் 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.

இலங்கை ஸ்கோர் கார்டு

ஒசதா பெர்னாண்டோ - 7

திமுத் கருணரத்னே - 7

தினேஷ் சண்டிமல் - 63*

ஏஞ்சலோ மேத்யூவ்ஸ் - 7

கமிந்து மெண்டிஸ் - 15

தனஞ்செய டி சில்வா - 22

குசால் மெண்டிஸ் - 10*

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com