விராட் கோலியை கௌரவித்த தில்லி கிரிக்கெட் சங்கம்; எதற்காக?

இந்திய அணியின் விராட் கோலியை தில்லி கிரிக்கெட் சங்கம் கௌரவித்துள்ளது.
விராட் கோலி (கோப்புப் படம்)
விராட் கோலி (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

இந்திய அணியின் விராட் கோலியை தில்லி கிரிக்கெட் சங்கம் கௌரவித்துள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலி தற்போது தில்லி அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடி வருகிறார். ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் தில்லி அணிக்காக விளையாடி வருகிறார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விராட் கோலி 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டாம் நாள் முடிவில் தில்லி அணி ரயில்வேஸ் அணியைக் காட்டிலும் 93 ரன்கள் முன்னிலை பெற்றது.

விராட் கோலிக்கு பாராட்டு

இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதை பாராட்டும் விதமாக விராட் கோலியை தில்லி கிரிக்கெட் சங்கம் கௌரவித்துள்ளது.

விராட் கோலி கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பின், அவர் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த நிலையில், தற்போது விராட் கோலியை தில்லி கிரிக்கெட் சங்கம் கௌரவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக தில்லி கிரிக்கெட் சங்கம் சார்பில் தெரிவித்திருப்பதாவது: விராட் கோலியை கௌரவிக்கும் இந்த நிகழ்வு நீண்ட காலமாக கிடப்பில் இருந்தது. தற்போது, விராட் கோலி தில்லியில் இருப்பதால், அவரை கௌரவிக்க வேண்டுமென நினைத்தோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சி கோப்பை தொடரில் ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவடைந்த பிறகு, தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் ரோஹன் ஜெட்லி, விராட் கோலிக்கு நினைவுப் பரிவு மற்றும் பொன்னடையை வழங்கினார்.

விராட் கோலியை தவிர்த்து, தில்லியிலிருந்து இஷாந்த் சர்மா மற்றும் வீரேந்திர சேவாக் இருவரும் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.