ஸ்டீவ் ஸ்மித் அரை சதத்தினால் (71) மீண்ட ஆஸி..! 254 ரன்கள் முன்னிலை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டி குறித்து...
Australia's Steve Smith plays a shot against West Indies on day three of the second cricket Test.
பந்தை பவுண்டரிக்கு அடித்த ஸ்டீவ் ஸ்மித்... படம்: ஏபி
Published on
Updated on
1 min read

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் ஆஸி. அணி 254 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸி. வென்றது. இரண்டாவது டெஸ்ட் கடந்த ஜூலை 3 முதல் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸில் ஆஸி. 2860க்கு ஆல் அவுட்டாக, மே.இ.தீ. 253-க்கு ஆட்டமிழந்தது.

தற்போது, இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸி. 221/7 ரன்கள் எடுத்துள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸி. சார்பில் கேமரூன் கிரீன் 51 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக விளையாடி 71 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அலெக்ஸ் கேரி 23*, பாட் கம்மின்ஸ் 4* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்கள்.

மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் ஜெய்டேன் சீல்ஸ், ஷமார் ஜோசப், ஜஸ்டின் கிரீவிஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்கள்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸி. 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Australia take a 254-run lead in the 2nd Test against the West Indies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com