
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலிருந்து பிரசித் கிருஷ்ணா விலகல்!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக விலகியுள்ளதைப் பற்றி...
பிரசித் கிருஷ்ணா - ஷுப்மன் கில்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக விலகியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கேரளத்தின் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி அஸ்ஸாமின் குவாஹாட்டியில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயித்த 406 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்தது. கேப்டன் ஷுப்மன் கில் அதிரடியாக இரட்டைச்சதமும், ரோஹித் சர்மா அதிரடி சதமும் விளாசினர்.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற சனிக்கிழமை (அக். 3) பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நடைபெறவிருக்கிறது.
இந்த நிலையில், வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக மூன்றாவது ஒருநாள் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவர் இந்தப் போட்டியின் 5 ஓவர்கள் பந்து வீசி 45 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் போட்டி தொடரில் மோசமான வானிலை காரணமாக வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகளவில் வெப்பம் மற்றும் மேகமூட்டமாக சூழல்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
இந்திய அணியின் தொடர்ந்து வீரர்கள் காயமடைந்து வருவது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. நிதீஷ்குமார் ரெட்டி, ஹார்திக் பாண்டியாவின் காயத்தைத் தொடர்ந்து, பிரசித் கிருஷ்ணாவும் காயத்தால் விலகியுள்ளார்.
பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக இதுவரை மாற்று வீரர் அறிவிக்கப்படாத நிலையில், அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மூன்றாவது போட்டியில் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
India fast bowler Prasidh Krishna has been ruled out of the 3rd ODI against West Indies after pulling his hamstring. The pacer was taken off during the second ODI in Guwahati after bowling just three overs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





