
இங்கிலாந்துக்கு எதிரான் டெஸ்ட்டில் இந்திய வீரர் முகமது சிராஜ் நடந்துகொண்ட விதம் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 367 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய இந்திய அணியும் அதே 367க்கு ஆட்டமிழந்தது.
அடுத்து தனது 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் விக்கெட்டை 5.5ஆவது ஓவரில் எடுத்தார்.
இந்த விக்கெட் எடுத்த உற்சாகத்தில் பென் டக்கெட் முகத்துக்கு நேராகச் சென்று சிராஜ் கத்தினார்.
பின்னர், பென் டக்கெட்டின் தோள் பட்டையை மோதினார். உடன் வந்த வாஷிங்டன் சுந்தர் சிராஜை அமைதியாகக் கூட்டிக்கொண்டு வந்தார்.
இந்திய ரசிகர்கள் “டிஎஸ்பி சிராஜ்” எனக் கொண்டாடி வருகிறார்கள். ஐசிசி விதிமீறலுக்காக சிராஜுக்கும் அபராதம் விதிக்கப்படுமென கணிக்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி 18 ஓவர்களில் 60/3 ரன்கள் எடுத்துள்ளது. ஜாக் கிராவ்லியை நிதீஷ் குமார் வீழ்த்தினார்.
பென் டக்கெட் எதுவும் பேசாமல் சென்றார். அடுத்ததாக 11.6ஆவது ஓவரில் ஆலி போப் விக்கெட்டையும் சிராஜ் வீழ்த்தினார்.
மூன்றாவது நாள் முடிவில் இரண்டாம் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியதுபோது அதன் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி வேண்டுமென்றே நேரத்தை செலவிட்டார். அதனால், கில், சிராஜ் கோபமடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்குமே எப்போது வேண்டுமானால் மோதல் ஏற்படலாம் என்ற நிலையில் இருக்கிறது.
சிராஜின் கொண்டாடட்டத்துக்கு இந்திய ரசிகர்களிடையே வரவேற்பு இருந்தாலும் ஐசிசி விதியின்படி அபராதம் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
Indian player Mohammed Siraj's conduct in the Test against England is coming under criticism.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.