வெற்றிக்கு அருகில் இங்கிலாந்து... 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி!

லார்ட்ஸ் டெஸ்ட்டின் கடைசி நாள் மதிய உணவு இடைவேளை வரையில் நடந்தது குறித்து...
England's Chris Woakes, center, celebrates with teammates after the dismissal of India's Nitish Kumar Reddy
நிதீஷ் குமார் விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள். படம்: ஏபி
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் மதிய உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இங்கிலாந்து, லண்டனில் லார்ட்ஸ் திடலில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் இரு அணிகளுமே 367 ரன்கள் எடுத்தது.

இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 4-ஆம் நாள் முடிவில் 58 ரன்களுக்கு 4 ரன்களை இழந்தது.

இந்நிலையில், ஐந்தாம் நாளில் தொடக்கத்திலேயே இந்திய அணி ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டினை இழந்தது.

அதற்கடுத்து, ஜடேஜா - நிதீஷ் குமார் அதிகமான பந்துகளை எதிர்கொண்டார்கள். இங்கிலாந்து வீரர்கள் நிதீஷ் குமாரிடம் அதிகமாக பேசிப் பேசி அவரை தவறிழைக்க வைக்க முயன்றார்கள்.

இந்திய அணியின் 7-ஆவது விக்கெட் விழுந்து 14 ஓவர்களுக்குப் பிறகுதான் 8-ஆவது விக்கெட்டாக நிதீஷ் ஆட்டமிழந்தார்.

தற்போது, மதிய உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது. 39.3 ஓவர்களில் இந்திய அணி 112/8 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா வெற்றி பெற 81 ரன்கள் தேவை. இங்கிலாந்து வெற்றிபெற 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவை. வெற்றியின் விளிம்பில் இங்கிலாந்து இருக்கிறது.

ஜடேஜா வெற்றியைப் பெற்றுத் தருவாரா என இந்திய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Summary

The Indian team is struggling in the third Test against England, having lost 8 wickets till lunch.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com