டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடத்தில் ஜோ ரூட்!

ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளதைப் பற்றி...

News image

ஜோ ரூட்

Updated On :16 ஜூலை 2025, 9:50 am

இணையதளச் செய்திப் பிரிவு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி) டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதேநேரத்தில் ஆஸ்திரேலியா - மேற்கிந்திய தீவுகள் தொடர், தென்னாப்பிரிக்கா - ஜிம்பாப்வே ஆகிய தொடர்களும் நடைபெற்று வருகிறது.

வாரந்தோறும் புதன்கிழமை ஐசிசியின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி, இந்தவார ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்கள் முறையே 104, 40 ரன்கள் விளாசிய ஜோ ரூட் 888 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மற்றொரு இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், இரண்டு இடங்கள் சரிந்து 3-வது இடத்துக்கு வந்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் ஒரு இடம் முன்னேறியுள்ளார்.

லார்ட்ஸ் டெஸ்ட்டில் சொதப்பிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ஒரு இடமும், கேப்டன் ஷுப்மன் கில் 3 இடங்களும் சரிவைக் கண்டுள்ளனர். இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தும் ஒரு இடம் சரிவைக் கண்டுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் பேட்டர்களின் தரவரிசை

1. ஜோ ரூட் - 888 புள்ளிகள்

2. கேன் வில்லியம்சன் - 867 புள்ளிகள்

3. ஹாரி புரூக் - 862 புள்ளிகள்

4. ஸ்டீவ் ஸ்மித் - 816 புள்ளிகள்

5. யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 801 புள்ளிகள்

6. டெம்பா பவுமா - 790 புள்ளிகள்

7. கமிந்து மெண்டிஸ் - 781 புள்ளிகள்

8. ரிஷப் பந்த் - 779 புள்ளிகள்

9. ஷுப்மன் கில் - 765 புள்ளிகள்

10. ஜேமி ஸ்மித் - 752 புள்ளிகள்

Summary

JOE ROOT - THE NEW NO.1 RANKED ICC TEST BATTER

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.