விராட் கோலி ஐபிஎல் கோப்பையை வென்றதில் மிக்க மகிழ்ச்சி: கிறிஸ் கெயில்

நீண்ட ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பைக்கான தேடலில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி ஐபிஎல் கோப்பையை வென்றதில் மிக்க மகிழ்ச்சி: கிறிஸ் கெயில்
படம் | ANI
Published on
Updated on
1 min read

நீண்ட ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பைக்கான தேடலில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்று 18 ஆண்டுகளாக தொடர்ந்த கோப்பைக்கானத் தேடலை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்படது முதல் அந்த அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி, ஐபிஎல் கோப்பையை வென்றவுடன் கண்ணீர் மல்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில், ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி மற்றும் நல்ல நண்பர் விராட் கோலி வென்றதில் மிக்க மகிழ்ச்சி என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் கோப்பையை வென்றதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். விராட் கோலிக்காகவும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 18 ஆண்டுகளாக கோப்பையை வெல்வதற்காக காத்திருந்தோம். நான் ஏற்கனவே கூறியதைப் போல, காத்திருப்போருக்கு நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும்.

ஐபிஎல் கோப்பையை தூக்கிப் பிடிப்பதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. ஆர்சிபி கோப்பையை வெல்வதை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அணியில் இல்லாவிட்டாலும் ஐபிஎல் கோப்பையை தொடும் வாய்ப்பு கிடைத்தது. ஒருவழியாக கோப்பையை வென்றுவிட்டோம் என்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அடுத்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் கோப்பையை வெல்லும் என நம்புகிறேன் என்றார்.

Summary

Chris Gayle has expressed his happiness over the Royal Challengers Bangalore winning the IPL trophy, which has been in the hunt for the IPL trophy for many years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com