
இந்தியாக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் இன்று(ஜூலை 31) துவங்கியது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சிறிது நேரம் மழை பெய்ந்ததால் போட்டி தாமதமானது.
பொறுப்பு கேப்டன் போப்
பின்னர், மழை நின்றவுடன் போட்டி துவங்கியது. இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விலகியதால், அவருக்குப் பதிலாகப் பொறுப்பு கேப்டன் ஆலி போப் கேப்டன் பதவியை நிர்வகிக்கிறார்.
இங்கிலாந்து அணி டாஸ் வென்றதும் பொறுப்பு கேப்டன் ஆலி போப் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார்.
5 போட்டிகளில் 5-வது டாஸ்
இந்தத் தொடரில் மொத்தமுள்ள 5 போட்டிகளிலுமே இந்திய டாஸ்ஸில் தோல்வியடைந்துள்ளது. மேலும், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 15 டாஸ் தோல்வி இதுவாகும்.
4 பேர் நீக்கம்
இங்கிலாந்து அணியில் லியாம் டாஸன், ஜோஃப்ரா ஆர்ச்சர், கார்ஸ், காயமடைந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நால்வரும் நீக்கப்பட்டுள்ளனர்.
அன்ஷுல் கம்போஜ் அதிரடி நீக்கம்
இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ரா, கடைசியாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சரியாக சோபிக்காத அன்ஷுல் காம்போஜ், காயமடைந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், ஷர்துல் தாக்குர் உள்ளிட்ட நல்வர் நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, கருண் நாயர் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி விவரம்
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மன் கில்(கேப்டன்), கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.
இங்கிலாந்து அணி விவரம்
ஜாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தெல், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டங்.
இதையும் படிக்க : பிராட்மேனின் 90 ஆண்டுகால சாதனையை முறியடிப்பாரா ஷுப்மன் கில்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.