இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷுப்மன் கில்லுக்கு அழுத்தம் இருக்கும் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதையும் படிக்க: ஐபிஎல் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் கோப்பை யாருக்கு?
இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் செயல்படவுள்ளார். துணைக் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
அழுத்தம் இருக்கும், ஆனால்...
இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில்லுக்கு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, அழுத்தம் இருக்கும் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கிப்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷுப்மன் கில் இளம் வீரர். அவர் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. கிரிக்கெட் வீரர் ஒருவர் அவரது ஆட்டத்தை மேம்படுத்திக் கொண்டு உலகின் பல்வேறு இடங்களிலும் ரன்கள் குவிக்க வேண்டும். ஷுப்மன் கில் மிகவும் திறமையான வீரர். இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தும்போது, அவருக்கு அழுத்தம் இருக்கும். அவர் பார்ப்பதற்கு முதிர்ச்சியான வீரராக தெரிகிறார். சவாலை ஏற்றுக்கொண்டு அவர் சிறப்பாக செயல்படுவார் என நினைக்கிறேன் என்றார்.
இதுவரை இந்திய அணிக்காக 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில், 1,893 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இது வெறும் ஆரம்பம் மட்டுமே; முகமது ஷமியை பாராட்டிய முன்னாள் வீரர்!

நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை: ஷுப்மன் கில்

சஞ்சு சாம்சன் நீக்கம்.. வாழ்த்துப் பதிவை ‘எடிட்’ செய்து வெளியிட்டாரா ஷுப்மன் கில்?

பிசிசிஐ சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு ஷுப்மன் கில் தேர்வு!
வீடியோக்கள்

புதுவையில் ஸ்டாலின் பெயரைச் சொல்லாத ராகுல்!: Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு


