
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் மிட்செல் மார்ஷ் தலைமையில் ஆஸ்திரேலிய அணியின் நியமிக்கப்பட்டுள்ளார்.
2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரை மையமாக வைத்து மேற்கிந்திய தீவுகளுக்கு ஜூலை மாதத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் மோதும் முதலாவது போட்டி ஜமைக்காவில் தொடங்குகிறது.
பிக்-பாஸ் தொடரில் ஹூபர்ட் அணிக்கு இறுதிப்போட்டியில் சதமடித்து கோப்பையை வென்று கொடுத்த மிட்ச் ஓவனுக்கு முதல் முறையாக தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியனான பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்த ஜோஸ் ஹேசில்வுட் மீண்டும் அணிக்குத் திரும்பியிருக்கிறார். சேவியர் பார்லெட், ஜேக் பிரேசர் மெக்கர்க், ஸ்டானிஸ் ஆகியோருக்கு அணியில் இடம்கிடைக்கவில்லை.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் டிராவிஸ் ஹெட், பாட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க் ஆகியோர் டி20 அணியில் விளையாடமாட்டர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் லக்னௌ அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் ஒரு சதம், 6 அரைசதங்கள் உள்பட 627 ரன்கள் குவித்திருந்தார்.
ஆஸ்திரேலிய அணி
மிட்சல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், கூப்பர் கோனொலி, டிம் டேவிட், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மாட் குஹ்னெமன், க்ளென் மேக்ஸ்வெல், மிட்ச் ஓவன், மேத்யூ ஷார்ட், ஆடம் ஜாம்பா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.