ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும் தென்னாப்பிரிக்க வீரர்கள்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும் தென்னாப்பிரிக்க வீரர்கள் குறித்து...

News image

படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :8 ஜூன் 2025, 6:50 pm IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர்கள் பலரும் புதிய சாதனை படைக்க காத்திருக்கின்றனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி லார்ட் திடலில் வருகிற ஜூன் 11 ஆம் தேதி தொடங்குகிறது.

ஐசிசி சார்பில் நடத்தப்படும் தொடர்களில் தென்னாப்பிரிக்க அணி மீண்டும் ஒருமுறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்க அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றதில்லை. அதனால், இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று முதல் முறையாக ஐசிசி சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் அந்த அணி உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர்களான அய்டன் மார்க்ரம், ககிசோ ரபாடா மற்றும் கேசவ் மகாராஜ் புதிய சாதனை படைக்க காத்திருக்கின்றனர்.

அய்டன் மார்க்ரம் முக்கியமான போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்காக பெரிய அளவில் சிறப்பாக விளையாடியது கிடையாது. ஐசிசியின் 4 நாக் அவுட் போட்டிகளில் விளையாடியுள்ள மார்க்ரம் வெறும் 68 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 22.66 ஆகவும், அதிகபட்ச ஸ்கோர் 31 ஆகவும் உள்ளது. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு உதவ வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது.

டெஸ்ட் போட்டிகளில் 3,000 ரன்கள் எடுக்க அவருக்கு இன்னும் 143 ரன்களே தேவைப்படுகின்றன. இதுவரை 45 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மார்க்ரம் 35.71 சராசரியுடன் 2,857 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 7 சதங்கள் மற்றும் 13 அரைசதங்கள் அடங்கும்.

தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா டெஸ்ட் மற்றும் சர்வதேச போட்டிகளில் சாதனை படைக்க காத்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஆலன் டொனால்டின் சாதனையை முறியடிக்க இன்னும் சில விக்கெட்டுகளே அவருக்கு தேவைப்படுகிறது. அதேபோல சர்வதேசப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள வீரர்கள் வரிசையில் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஜாக் காலிஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இந்த சாதனையை ரபாடா முறியடிக்க வாய்ப்பிருக்கிறது.

டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள ஐந்தாவது வீரராக ரபாடா உள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 327 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இன்னும் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால், அவர் ஆலன் டொனால்டின் அதிக விக்கெட்டுகள் (330 விக்கெட்டுகள்) சாதனையை முறிடிப்பார். 439 விக்கெட்டுகளுடன் டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரராக டேல் ஸ்டெயின் உள்ளார்.

சர்வதேசப் போட்டிகளில் ககிசோ ரபாடா 566 விக்கெட்டுகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறார். சர்வதேசப் போட்டிகளில் ஜாக் காலிஸ் 572 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இன்னும் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால், ஜாக் காலிஸின் சாதனையை ரபாடா முறியடிப்பார். தென்னாப்பிரிக்க அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற பெருமை ஷான் பொல்லக்கிடம் உள்ளது. அவர் 414 போட்டிகளில் 823 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளரான கேசவ் மகாராஜ் டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இன்னும் இரண்டு விக்கெட்டுகளே தேவைப்படுகின்றன. அதேபோல, சர்வதேசப் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையை படைக்க அவருக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் தேவைப்படுகின்றன. 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால், தென்னாப்பிரிக்க அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் சுழற்பந்துவீச்சாளர் என்ற மகத்தான சாதனையை அவர் படைப்பார்.

இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கேசவ் மகாராஜ், 198 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சர்வதேசப் போட்டிகளில் அவர் 294 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.