உணவு இடைவேளை: 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா!

டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல்நாளில் உணவு இடைவேளை வரை நடந்தது குறித்து..
South Africa's Kagiso Rabada, center, celebrates the dismissal of Australia's Cameron Green during the World Test Championship final
கிரீன் விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் ராபாடா உடன் துள்ளிக் குதிக்கும் ஸ்டப்ஸ். படம்: ஏபி
Updated on
1 min read

டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல்நாளில் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியில் தெ.ஆ. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதல்முறையாக தொடக்க வீரராக களமிறங்கியிருக்கும் மார்னஸ் லபுஷேன் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேமரூன் கிரீன் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்த 2 விக்கெட்டுகளையும் ரபாடா ஒரே ஓவரில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

பிஜிடி தொடரில் சொதப்பிய கவாஜா மீண்டும் டக் அவுட்டாகி வெளியேறினார்.

அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மார்கோ யான்சென், ரபாடா தலா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.

ஆஸி. அணியில் ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே நிதானமாக விளையாடி வருகிறார். 51 பந்துகளில் 26 ரன்கள் எடுத்துள்ளார்.

முதல் செஷனில் தென்னாப்பிரிக்க அணியின் கையே ஓங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com