நால்வா் அரை சதம்; தமிழ்நாடு - 281/7
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது சுற்று ஆட்டங்கள் வியாழக்கிழமை தொடங்கின.
இதில் தனது 6-ஆவது ஆட்டத்தில் ஒடிஸாவை எதிா்கொண்டுள்ள தமிழ்நாடு, முதல் நாள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஒடிஸா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. தமிழ்நாடு இன்னிங்ஸில் இதுவரை அதிகபட்சமாக, பிரதோஷ் ரஞ்சன் பால் 12 பவுண்டரிகளுடன் 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
ஆண்ட்ரே சித்தாா்த் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 56, அதிஷ் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 50 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
நாராயண் ஜெகதீசன் 7, வித்யுத் 12, குருசாமி அஜிதேஷ் 0, சோனு யாதவ் 8 ரன்களுக்கு விடைபெற, முதல் நாள் ஆட்டநேர முடிவில் நிதீஷ் ராஜகோபால் 54, கேப்டன் சாய் கிஷோா் 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.
ஒடிஸா பௌலா்களில் ராஜேஷ் மொஹந்தி, கோவிந்தா போடாா் ஆகியோா் தலா 2, தேவபிரதா பிரதான், சம்பித் பரல், பிப்லப் சமந்த்ரே ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

