இப்படியுமா ரன் அவுட் ஆகும்? வைரலாகும் விடியோ!

மகாராஷ்டிர பிரீமியர் லீக்கில் நடந்த வித்தியாசமான ரன் அவுட் குறித்து...
MPL Wicketkeeper Suraj Shinde Runs Out Non-Striker With Rare Rebound Throw
மகாராஷ்டிர பிரீமியர் லீக்கில் நடந்த வித்தியாசமான ரன் அவுட்.படங்கள்: எக்ஸ் / ஜியோ ஹாட்ஸ்டார்.
Published on
Updated on
1 min read

கிரிக்கெட்டில் இப்படியுமா ஆட்டமிழக்க முடியும்? என்பதுபோல் யாராவது கேள்வி கேட்பார்களெனில் இந்த விடியோவை பார்த்தால் அமைதியாகி விடுவார்கள்.

மாகாராஷ்டிர பிரீமியல்ர் லீக்கில் ஸ்டிரைக்கரை ரன் அவுட் செய்ய வீசப்பட்ட பந்து அந்த ஸ்டம்பில் பட்டு நான் ஸ்டிரைக்கரில் உள்ள ஸ்டம்பில் பட்டு ஆட்டமிழந்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஸ்டம்புக்கு நேராக ரன் அவுட் செய்யும்போது இப்படி ஆகி பார்த்திருப்போம். ஆனால், முற்றிலும் வேறு திசையில் இருந்து அடிக்கப்பட்டு இப்படி ரன் அவுட் ஆனது மிகவும் அதிசயமானது.

இந்த விடியோவை ஜியோ ஹாட்ஸ்டார் பகிர்ந்துள்ளது. இந்த விடியோவுக்கு ரசிகர்கள் இந்த மாதிரி ஒரு ரன் அவுட்டை நான் என் வாழ்க்கையிலேயே பார்த்ததில்லை எனக் கூறி வருகிறார்கள்.

புணேரி பாப்பா முதலில் பேட்டிங் செய்து 203 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அடுத்து விளையாடிய ரெய்கட் ராயல்ஸ் அணியின் முதல் ஓவரில் 5ஆவது பந்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.

சித்தேஷ் வீர் ரன் எடுக்க முயற்சிக்கும்போது, புணேரி பாப்பா விக்கெட் கீப்பர் சுராஜ் ஷிண்டே பந்தினை எடுத்து அடித்தார். அந்தப் பந்து ஸ்டம்பில் பட்டு எதிர் திசையில் சென்று நான் ஸ்டிரைக்கராக இருந்த ஹர்ஷ் மொகவீராவை ஆட்டமிழக்கச் செய்தது.

இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com