கம்மின்ஸ் 6 விக்கெட்டுகள்: 138 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா!

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் அசத்தல் பந்துவீச்சால் தெ.ஆ. அணி 138 ரன்களுக்கு சுருண்டது.
Australia's captain Pat Cummins celebrates the dismissal of South Africa's captain Temba Bavuma on day two of the World Test Championship final
டெம்பா பவுமா விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் பாட் கம்மின்ஸ். படம்: ஏபி
Published on
Updated on
1 min read

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் அசத்தல் பந்துவீச்சால் தெ.ஆ. அணி 138 ரன்களுக்கு சுருண்டது.

லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 121க்கு ஆல் அவுட் ஆக, முதல் நாள் முடிவில் தெ.ஆ. 43/4 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாம் நாளில் சிறப்பாகவே தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதற்குப் பிறகு நிதானமாக ஆடிய டேவிட் பெடிங்ஹாம் 445 ரன்கள் எடுத்து அணியை ஓரளவுக்கு நல்ல நிலையில் தூக்கி நிறுத்தினார்.

இருப்பினும், பாட் கம்மின்ஸின் சிறப்பான பந்துவீச்சினால் தெ.ஆ. அணி சுருண்டது.

முதல் இன்னிங்ஸில் ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் 40-ஆவது ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தை மாற்றினார். கடைசியில் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளுடன் முடித்தார்.

மிட்செல் ஸ்டார்க் 2, ஜோஷ் ஹேசில்வுட் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். தெ.ஆ. அணி சார்பில் அதிகபட்சமாக டேவிட் பெடிங்ஹாம் 45 ரன்கள் குவித்தார்.

தென்னாப்பிரிக்க அணி 74 ரன்கள் பின்னிலையில் இருக்கிறது. ஆஸி. தனது 2ஆவது இன்னிங்ஸை தொடங்கவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com