பிஜிடி தொடரின் தோல்விக்குப் பின் கோலியை கேப்டனாக்கி இருப்பேன்: ரவி சாஸ்திரி

முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி டெஸ்ட்டில் விராட் கோலியின் ஓய்வு குறித்து பேசியதாவது...
virat kohli
விராட் கோலிஏபி
Published on
Updated on
1 min read

விராட் கோலியின் ஓய்வு சரியாக கையாளப்பட்டிருக்க வேண்டுமென ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுடனான பிஜிடி தொடரின் தோல்விக்குப் பிறகு விராட் கோலி தனது ஓய்வை அறிவித்தார். அதாவது, கடந்த மாதம் ஐபிஎல் போட்டியின்போது இதனை அறிவித்தார்.

இங்கிலாந்துடன் நடைபெறும் டெஸ்ட் தொடருக்காக அணித் தேர்வு நடைபெற்று வந்தது. இதில் விராட் கோலி, ரோஹித் நீக்கப்படுவாரென தகவல்கள் வெளியான நிலையில் இருவருமே தங்களது ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்கள்.

விராட் கோலி டெஸ்ட்டில் 123 போட்டிகளில் 9,230 ரன்கள் குவித்துள்ளார். அதில் 30 சதங்கள் அடங்கும். இங்கிலாந்து தொடர் வரும் ஜூன் 20ஆம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது:

ஓய்வுக்கு முன் கோலியை கேப்டனாக்கி இருப்பேன்

விராட் கோலி போனபிறகுதான் மக்கள் அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதைப் புரிந்து கொள்வார்கள். அவர் ஓய்வு பெற்றதும் ஓய்வு பெற்ற விதமும் விதமும் வருத்தமளிக்கிறது.

இதை விடவும் நல்ல முறையில் அவரை ஓய்வு பெற வைத்திருக்கலாம். கூடுதலாக இது குறித்து அவரிடம் பேசியிருக்கலாம்.

என்னால் எதாவது செய்ய முடிந்திருந்தால், பிஜிடி தொடரின் தோல்விக்குப் பின் நான் கோலியை கேப்டனாக்கி இருப்பேன் என்றார்.

தற்போது, டெஸ்ட் கேப்டனாக ஷுப்மன் கில் தேர்வாகியுள்ளார். விராட் கோலி 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com