அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

இங்கிலாந்தில் இருந்து திடீரென இந்தியாவுக்குத் திரும்பிய கௌதம் கம்பீர்! என்ன காரணம்?

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்தியாவுக்குத் திரும்பியது குறித்து...

News image

கௌதம் கம்பீர் - படம்: பிசிசிஐ

Updated On :13 ஜூன் 2025, 2:43 pm IST

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இங்கிலாந்தில் இருந்து திடீரென இந்தியாவுக்குத் திரும்பினார்.

இந்திய அணிக்கும் இந்தியா ஏ அணிக்கும் நடைபெறவிருந்த பயிற்சி ஆட்டத்திற்கான சில மணி நேரம் முன்பாகவே கௌதம் கம்பீர் இந்தியாவுக்குக் கிளம்பியிருக்கிறார்.

ரீவ்ஸ்போர்ட்ஸ் என்ற ஆங்கில ஊடகத்தின் தகவலின்படி கௌதம் கம்பீரின் தாயார் ஐசியிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கௌதம் கம்பீர் அடுத்த வாரம் அதாவது முதல் போட்டியான ஜூன். 20ஆம் தேதிக்கு முன்பாக மீண்டும் இங்கிலாந்துக்கு வந்தடைவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கௌதம் கம்பீர் இதற்கு முன்பாகவும் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின்போது இந்தியாவுக்கு வந்து மீண்டும் சென்றார்.

இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் மோதுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி ஜூன்.20ஆம் தேதி தொடங்குகிறது. கடைசி போட்டி ஜூலை 31ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பெயர் ஆண்டர்சன் - டெண்டுல்கர் என மாற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஏ அணியும் இங்கிலாந்து லயன்ஸ் அணியும் மோதிய இரண்டு டெஸ்ட்டும் டிராவில் முடிந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.