6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

5 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஸ்மிருதி மந்தனா!

ஐசிசியின் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

smiriti mandhana

ஸ்மிருதி மந்தனா - கோப்புப் படம்

Published On :

ஐசிசியின் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று (ஜூன் 17) வெளியிட்டது. இந்த தரவரிசையில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 6 ஆண்டுகளில் முதல் முறையாக முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்தார்.

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வர்ட் 19 புள்ளிகளை இழந்து மூன்றாமிடத்துக்கு சறுக்கினார். 727 ரேட்டிங் புள்ளிகளுடன் ஸ்மிருதி மந்தனா முதலிடத்திலும், தலா 719 ரேட்டிங் புள்ளிகள் பெற்று இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வர்ட் இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களிலும் உள்ளனர்.

ஸ்மிருதி மந்தனாவை தவிர்த்து, இந்த தரவரிசையில் இந்திய வீராங்கனைகளான ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌரும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் முறையே 14 மற்றும் 15 ஆம் இடங்களில் உள்ளனர்.

அண்மையில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு தொடரில் ஸ்மிருதி மந்தனா அபாரமாக செயல்பட்டார். ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதலிடம் பிடித்துள்ள அவர், டி20 போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.