டெஸ்ட் போட்டிகளுக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷுப்மன் கில்லுக்கு இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி நாளை (ஜூன் 20) லீட்ஸ் திடலில் தொடங்குகிறது.
கேரி கிறிஸ்டன் ஆதரவு
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக சிறப்பாக செயல்பட ஷுப்மன் கில் காத்திருப்பதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஜியோஹாட்ஸ்டாரில் பேசியதாவது: ஷுப்மன் கில் மிகச் சிறந்த கேப்டனாக உருவெடுக்கப் போவதாக நினைக்கிறேன். அவர் மிகவும் புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர். அவர் ஆட்டத்தை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படக் கூடியவர். அவர் மிகவும் திறமையான வீரர். மேலும், அவர் சிறந்த மனிதர் என்பது மிகவும் முக்கியமானது. அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொள்ளும்போது, கண்டிப்பாக அழுத்தம் என்பது இருக்கத்தான் போகிறது.
இதையும் படிக்க: சாய் சுதர்சனுக்கு முன்பாக அபிமன்யூவிற்கு வாய்ப்பளியுங்கள்: கைஃப்
இளம் வீரர் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படும்போது, அவர் எப்படி அணியை வழிநடத்துவார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். அவரது கேப்டன் பொறுப்பு மிகுந்த சோதனைக்கு உட்படுத்தப்படும். ஆனால், சிறந்த கேப்டனாக உருவெடுப்பதற்கான அனைத்துத் தகுதிகளும் ஷுப்மன் கில்லுக்கு இருப்பதாக நான் நம்புகிறேன். அவர் சர்வதேச அரங்கில் கலக்க காத்திருக்கிறார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அகமதாபாத் திடலை தனது கோட்டையாக மாற்றிய ஷுப்மன் கில்!

ஷுப்மன் கில் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 2-வது வெற்றி!

ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 2-வது வெற்றி!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவார்: சாய் சுதர்சன்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


