எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது! முதல்வர் விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்!தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 2-வது வெற்றி!

ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image

பந்தை எதிர்கொள்ளும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் - படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :12 ஏப்ரல் 2026, 7:38 pm IST

ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, லக்னௌ முதலில் விளையாடியது.

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு!

முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது.

லக்னௌ அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் அய்டன் மார்க்ரம் 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, நிக்கோலஸ் பூரன் 19 ரன்களும், ரிஷப் பந்த், அப்துல் சமத் மற்றும் முகுல் சௌதரி தலா 18 ரன்களும் எடுத்தனர். ஜார்ஜ் லிண்டே 16 ரன்கள் எடுத்தார்.

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்களில் 28 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அசோக் சர்மா இரண்டு விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் ககிசோ ரபாடா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 2-வது வெற்றி!

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் களமிறங்கினர். சாய் சுதர்சன் 15 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, ஷுப்மன் கில் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடியது.

நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் ஜோஸ் பட்லர் அரைசதம் விளாசி அசத்தினர். ஷுப்மன் கில் 40 பந்துகளில் 56 ரன்களும் (6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), ஜோஸ் பட்லர் 37 பந்துகளில் 60 ரன்களும் (11 பவுண்டரிகள்) எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 21 ரன்களுடனும், ராகுல் திவாட்டியா 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

லக்னௌ தரப்பில் முகமது ஷமி, பிரின்ஸ் யாதவ் மற்றும் திக்வேஷ் சிங் ரதி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Summary

In the IPL series, the Gujarat Titans defeated the Lucknow Super Giants by 7 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.