கேப்டன் பொறுப்பு ஷுப்மன் கில்லுக்கு எளிதாக இருக்கப் போவதில்லை: ரவி சாஸ்திரி

கேப்டன் பொறுப்பு ஷுப்மன் கில்லுக்கு எளிதாக இருக்கப் போவதில்லை என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
shubman gill
ஷுப்மன் கில் படம் | பிசிசிஐ
Published on
Updated on
1 min read

கேப்டன் பொறுப்பு ஷுப்மன் கில்லுக்கு எளிதாக இருக்கப் போவதில்லை என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி நாளை (ஜூன் 20) லீட்ஸ் திடலில் தொடங்குகிறது.

கேப்டன் பொறுப்பு எளிதல்ல

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டனாக இங்கிலாந்துக்கு எதிரான சவாலை சமாளிப்பது அவ்வளவு எளிது கிடையாது எனவும், ஷுப்மன் கில் பொறுமையாக இருந்து வெற்றி பெற வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ரவி சாஸ்திரி
ரவி சாஸ்திரிகோப்புப் படம்

இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூவில் அவர் பேசியதாவது: ஷுப்மன் கில் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். கேப்டன் பொறுப்பு அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தும் கடினமான வேலை ஷுப்மன் கில்லுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான தொடர் ஒருபோதும் எளிதாக இருக்காது. ஆனால், அவர் இந்த தொடரிலிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்வார்.

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தும்போது, ஷுப்மன் கில் மிகவும் அமைதியாகவும், பொறுமையாகவும் செயல்படுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர் முதிர்ச்சியடைந்த வீரராக மாறியுள்ளார். இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இந்த தொடர் ஷுப்மன் கில்லுக்கு நிறைய விஷயங்களை கற்றுத் தரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com