இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்வதைக் காட்டிலும் பெரிது என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (ஜூன் 20) முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெறுகிறது.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அண்மையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின்போது, இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வினும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். மூத்த வீரர்கள் பலரும் இல்லாத நிலையில், ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் கோப்பையை விட பெரிது...
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்வது ஐபிஎல் கோப்பையை வெல்வதைக் காட்டிலும் மிகப் பெரிய சாதனை என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அணியின் கேப்டனாக இந்தியாவை வழிநடத்துவது மிகப் பெரிய விஷயம். இந்திய அணியை கேப்டனாக வழிநடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்காது. ஒருவர் இரண்டு அல்லது மூன்று முறை இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அணியை கேப்டனாக வழிநடத்தினால், அது அந்த தலைமுறையில் சிறந்த விஷயமாக இருக்கும்.
ஐபிஎல் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். என்னைப் பொருத்தவரை, சேனா நாடுகளில் (இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா) டெஸ்ட் தொடரை வெல்வது ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதைக் காட்டிலும் மிகப் பெரிய சாதனை என்றார்.
கடந்த 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி, ஷுப்மன் கில் தலைமையில் தொடரைக் கைப்பற்றுமா என்பதை பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை: ஷுப்மன் கில்
பிசிசிஐ நமன் விருதுகள் 2026: சிறந்த வீரா் கில்; வீராங்கனை ஸ்மிருதி!

சஞ்சு சாம்சன் நீக்கம்.. வாழ்த்துப் பதிவை ‘எடிட்’ செய்து வெளியிட்டாரா ஷுப்மன் கில்?

பிசிசிஐ சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு ஷுப்மன் கில் தேர்வு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


