
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் சதம் விளாசினார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 6 ரன்கள் முன்னிலை பெற்றது.
சதம் விளாசிய கே.எல்.ராகுல்
6 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, போட்டியின் நான்காம் நாளான இன்று (ஜூன் 23) சிறப்பாக விளையாடி வருகிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்து வருகின்றனர். நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல் 202 பந்துகளில் சதம் விளாசினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடி வரும் ரிஷப் பந்த் 90 ரன்களைக் கடந்துள்ளார்.
இந்திய அணி 250 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்று வலுவாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.