பிளேயிங் லெவனில் இடம் பெறுவது குறித்து அதிகம் யோசிக்கவில்லை: ஆலி போப்

பிளேயிங் லெவனில் இடம்பெறுவது குறித்து அதிகம் யோசிக்கவில்லை என இங்கிலாந்து வீரர் ஆலி போப் தெரிவித்துள்ளார்.
Ollie Pope expresses joy after scoring a century in the first innings
முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஆலி போப்படம் | AP
Updated on
1 min read

பிளேயிங் லெவனில் இடம்பெறுவது குறித்து அதிகம் யோசிக்கவில்லை என இங்கிலாந்து வீரர் ஆலி போப் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஆலி போப் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய இங்கிலாந்து அணியில் இடம்பெற்றார். அந்த தொடரின் முதல் போட்டியில் 196 ரன்கள் எடுத்து அபாரமாகத் தொடங்கிய ஆலி போப், அடுத்த நான்கு போட்டிகளில் வெறும் 40 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்த தொடருக்குப் பிறகு ஆலி போப் விளையாடும் விதம் மிகப் பெரிய பேசுபொருளானது. அவர் சரியாக விளையாடுவதில்லை என்பதால், பிளேயிங் லெவனில் இடம்பெறுவது சந்தேகம் எனவும் கூறப்பட்டது. இருப்பினும், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணிக்கு எதிரான இங்கிலாந்து அணியில் அவர் இடம்பெற்றார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெற்ற துணைக் கேப்டன் ஆலி போப், சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். அவர் 106 ரன்கள் எடுத்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதிகம் யோசிக்கவில்லை

முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய நிலையில், பிளேயிங் லெவனில் இடம்பெறுவது குறித்து அதிகம் யோசிக்கவில்லை என ஆலி போப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பிளேயிங் லெவனில் இடம்பெறுவது தொடர்பான ஆலோசனைகள் என்னை பாதிக்காத வகையில் பார்த்துக் கொண்டேன். என்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்தி நன்றாக விளையாட வேண்டும் என்பதை மட்டும் உறுதிப்படுத்திக் கொண்டேன். முதல் 30 ரன்கள் எடுக்கும் வரை நிதானமாக விளையாடினேன். அதன் பின், நம்பிக்கையுடன் ஷாட்டுகளை விளையாடினேன்.

வெளியில் என்ன நடக்கிறது, என்ன பேசுகிறார்கள் என்பது குறித்து கவலைப்படாமல் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்தேன். முதல் இன்னிங்ஸில் சதம் விளாசியது மகிழ்ச்சியளிக்கிறது. இது நீண்ட தொடர். தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com