336* கேட்ச்கள்.. விராட் கோலி புதிய சாதனை!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்து ராகுல் டிராவிட் சாதனையை முறியடித்தார் விராட் கோலி.


சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச்கள் பிடித்து ராகுல் டிராவிட் சாதனையை முறியடித்தார் விராட் கோலி.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் ஆடி 264 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்-அவுட் ஆனது.
பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரரான விராட் கோலி இந்தப் போட்டியில் புதிய சாதனை ஒன்றையும் தனது பெயரில் இணைத்து அசத்தியுள்ளார்.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஜோஸ் இங்லீஸ் மற்றும் நாதன் எல்லீஸ் இருவரின் கேட்ச்களையும் பிடித்து விராட் கோலி அசத்தினார். இதன்மூலம் சர்வதேசப் போட்டிகளில் அதிக கேட்சுகளைப் பிடித்தவர் என்றப் பட்டியலில் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய அணிக்காக அதிக கேட்ச் பிடித்தவர்கள்(விக்கெட் கீப்பர் அல்லாதவர்கள்)
விராட் கோலி - 336* கேட்ச்கள்
ராகுல் டிராவிட் -334 கேட்ச்கள்
முகமது அசாருதீன் -261 கேட்ச்கள்
சச்சின் டெண்டுல்கர் -256 கேட்ச்கள்
ரோஹித் சர்மா -223 கேட்ச்கள்
இதையும் படிக்க: கையில் கறுப்பு பட்டையுடன் களமிறங்கிய இந்திய அணி! ஏன்?
ஜெயவர்த்தனே (இலங்கை) - 218 கேட்ச்கள்
விராட் கோலி (இந்தியா) - 161* கேட்ச்கள்
ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) -160 கேட்ச்கள்
முகமது அசாருதீன் (இந்தியா) - 156 கேட்ச்கள்
ராஸ் டெய்லர் (நியூசிலாந்து) -142 கேட்ச்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...