தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

பாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசி. அணி அறிவிப்பு; முக்கிய வீரர்கள் இல்லை!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மார்ச் 11) அறிவித்துள்ளது.

நியூசிலாந்து அணி வீரர்கள் - படம் | AP

Published On :11 மார்ச் 2025, 4:28 pm IST

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மார்ச் 11) அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் தொடங்குகிறது. முதல் டி20 போட்டி மார்ச் 16 ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது.

நியூசிலாந்து அணி அறிவிப்பு

விரைவில் டி20 தொடர் தொடங்கவுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மார்ச் 11) அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்த டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்ட மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதால், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் அவர்கள் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளதால், டெவான் கான்வே, லாக்கி பெர்குசன், கிளன் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா மற்றும் மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம்பெறவில்லை.

காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியிலிருந்து விலகிய மாட் ஹென்றி, பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது மற்றும் 5-வது டி20 போட்டியில் விளையாடவுள்ளார்.

நியூசிலாந்து டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம்

மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், ஜேக்கோப் டஃபி, ஸாக் ஃபோல்க்ஸ் (4 மற்றும் 5-வது போட்டிக்கு மட்டும்), மிட்ச் ஹே, மாட் ஹென்றி (4 மற்றும் 5-வது போட்டிக்கு மட்டும்), கைல் ஜேமிசன் (முதல் 3 போட்டிகளுக்கு மட்டும்), டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், வில்லியம் ஓ’ரூர்க் (முதல் 3 போட்டிகளுக்கு மட்டும்), டிம் ராபின்சன், பென் சியர்ஸ், டிம் செய்ஃபெர்ட், ஈஷ் சோதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.