நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராகுல் டிராவிட்டுடன் இணைந்து செயல்படுவது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் ராகுல் டிராவிட்டுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து செயல்படவுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் செயல்பட்டபோது, சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் இணைந்தார். தற்போது, ராகுல் டிராவிட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒன்றாக இணைந்து செயல்படவுள்ளனர். ஆனால், இந்த முறை சஞ்சு சாம்சன் கேப்டனாகவும், ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளர்களாகவும் செயல்படவுள்ளனர்.
மனம் திறந்த சஞ்சு சாம்சன்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ராகுல் டிராவிட்டுடன் இணைந்து செயல்படுவது குறித்து அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியுள்ளார்.
ராகுல் டிராவிட்டுடன் இணைந்து செயல்படுவது குறித்து சஞ்சு சாம்சன் கூறியதாவது: தற்போது நடக்கும் விஷயங்களை பார்க்கும்போது, மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஐபிஎல் தொடரில் முதல் சீசனில் ராகுல் டிராவிட் தலைமையின் கீழ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடினேன். இளம் வீரருக்கான தேடலில் ஈடுபட்டிருந்த ராகுல் டிராவிட், என்னுடைய அணிக்காக விளையாட முடியுமா எனக் கேட்டார். அவர் கேட்ட அந்த நாள் முதல் இன்று வரை எனக்கு நிறைய மகிழ்ச்சியான தருணங்கள் கிடைத்துள்ளன.
நான் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன். பல ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார். இது மிகவும் தனித்துவமான மற்றும் சிறப்பான உணர்வைத் தருகிறது. அவர் எப்போதும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அங்கமாக உள்ளார். அவர் மீண்டும் அணியில் இணைந்துள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் இந்திய அணி என இரண்டிலுமே அவரது தலைமையின் கீழ் விளையாடியுள்ளேன். ஆனால், அவர் தலைமைப் பயிற்சியாளராகவும், நான் கேப்டனாகவும் செயல்படவுள்ளது இதுவே முதல் முறை. இது உண்மையில் மிகவும் சிறப்பான தருணம். ராகுல் டிராவிட்டிடமிருந்து இனி வரும் ஆண்டுகளில் நிறைய கற்றுக்கொள்ள இருக்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடைசி டி20: இந்தியா பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் மீண்டும் சஞ்சு சாம்சன்!
முடிவுக்கு வருகிறதா சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை? கம்பீர் விளக்கம்!

இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் இல்லை!

ஜிம்பாப்வே டி20 தொடரிலிருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்; அணியில் 3 அறிமுக வீரர்கள்!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



