நியூசி. அபாரம்: 220 ரன்கள் குவிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அபாரமாக விளையாடியது.


பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அபாரமாக விளையாடி 220 ரன்கள் குவித்துள்ளது.
பின் ஆலன் 50, ஷெப்பர்ட் 44, பிரேஸ்வெல் 46 ரன்கள் குவித்தார்கள்.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
நியூசி. கேப்டன் 23 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார்.
பாகிஸ்தான் சார்பில் ஹாரிஸ் ரவுஃப் 3 விக்கெட்டுகள் அப்ரார் அஹமது 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.
5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் ஏற்கனவே நியூசிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே தொடரில் சமநிலையைப் பெற முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...