ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாட யஷஸ்வி ஜெய்ஸ்வால் விருப்பம்!

மும்பை அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

News image

யஷஸ்வி ஜெய்ஸ்வால் (கோப்புப் படம்)

Updated On :9 மே 2025, 5:46 pm IST

மும்பை அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில் மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்காக விளையாட உள்ளதாகக் கூறி கடந்த மாதம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தனது குடும்பத்துடன் கோவாவுக்கு நகரவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கோவா அணிக்காக விளையாடவுள்ளதாகக் கூறிய ஜெய்ஸ்வாலின் விருப்பத்தினை மும்பை கிரிக்கெட் சங்கமும் உடனடியாக ஏற்றுக் கொண்டது.

இந்த நிலையில், கோவாவுக்கு நகர்வதில் குடும்பத்தின் திட்டங்கள் சிலவற்றை யோசிக்க வேண்டியிருப்பதால், அடுத்த சீசனின் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்து மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு ஜெய்ஸ்வால் கடிதம் எழுதியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: கோவா அணிக்காக விளையாட எனக்கு கொடுக்கப்பட்ட தடையில்லாச் சான்றிதழை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். கோவாவுக்கு நகர்வதற்கு சில குடும்ப திட்டங்கள் குறித்து யோசிக்க வேண்டியிருக்கிறது. அதனால், இந்த சீசனில் மும்பை அணிக்காக விளையாட அனுமதி அளிக்குமாறு மும்பை கிரிக்கெட் சங்கத்தை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். கோவா அணிக்காக விளையாடுவதற்காக பெற்ற தடையில்லாச் சான்றிதழை நான் பிசிசிஐ இடமும் ஒப்படைக்கவில்லை. கோவா கிரிக்கெட் சங்கத்திடமும் ஒப்படைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.