இந்தியாவுக்கு எதிராக இவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்: முன்னாள் இங்கிலாந்து வீரர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக இவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்: முன்னாள் இங்கிலாந்து வீரர்
படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஜியாஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் ஸாக் கிராலி மற்றும் ஆலி போப் சிறப்பாக செயல்பட வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜியாஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார்.

ஸாக் கிராலி மற்றும் ஆலி போப் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படத் தவறி வருகின்றனர். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ்களிலும் ஸாக் கிராலி, வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றியிடமே ஆட்டமிழந்தார். அந்த தொடரில் அவரது சராசரி 9-க்கும் குறைவாகவே இருந்தது.

இங்கிலாந்து அணியின் மற்றொரு வீரரான ஆலி போப்புக்கும் கடந்த ஆண்டு சிறப்பானதாக அமையவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 196 ரன்கள் எடுத்து அசத்தினார். அதன் பின், அவரால் தொடர்ச்சியாக நன்றாக விளையாடி ரன்கள் குவிக்க முடியவில்லை.

ஸாக் கிராலி மற்றும் ஆலி போப் குறித்து ஜியாஃப்ரி பாய்காட் பேசியதாவது: ஸாக் கிராலி மற்றும் ஆலி போப் இருவரும் அவர்கள் பேட்டிங்கில் செய்யும் தவறுகளுக்கு தீர்வினைக் கண்டுபிடித்துவிட்டனர் எனக் கூறமுடியாது. ஏனெனில், ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சு மிகவும் சராசரியாக இருந்தது. ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சாளர்கள் மிதவேக பந்துவீச்சாளர்களே. அதனால், அவர்களுக்கு எதிராக ஸாக் கிராலி மற்றும் ஆலி போப் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளவில்லை.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. இந்த தொடரில் இவர்கள் இருவரும் எவ்வாறு செயல்படப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்தியாவுக்கு எதிராக இவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதிலேயே உண்மையான சவால் அடங்கியுள்ளது என்றார்.

அண்மையில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஸாக் கிராலி 124 ரன்களும், ஆலி போப் 171 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com