

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டா பயோவில் நஸார் எமோஜியை பதிவிட்டுள்ளார்.
இதேபோல் அவரது காதலனும் தனது இன்ஸ்டா பயோவில் நஸார் எமோஜியை பதிவிட்டுள்ளது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, பிரபல ஹிந்தி இசையமைப்பாளரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பலாஷ் முச்சலை நீண்ட காலமாக காதலித்து வருகிறார்.
இவருடன் நிச்சயம் செய்துகொண்டதை விடியோ வெளியிட்டு ஸ்மிருதி மந்தனா அண்மையில் உறுதிபடுத்தியிருந்தார்.
திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால், திருமணத்தை ஒத்திவைப்பதாக குடும்பத்தினர் அறிவித்திருந்தனர்.
பின்னர், அவரது காதலன் யாரோ ஒரு பெண்ணுடன் தவறாக பேசும்படியான ஸ்கிரீன் ஷாட்டுகள் வெளியாகி சர்ச்சையாகின.
இதனால் திருமணம் நடைபெறுமா என்பது கேள்விக்குரியானது. ஆனால், இருவரும் இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவிக்காமல் இருந்தனர்.
இந்நிலையில்தான், இருவருமே தங்களது இன்ஸ்டா பயோவில் நஸார் எமோஜியைப் பதிவிட்டுள்ளார்கள். அந்த எமோஜிக்கு தீய பார்வைகளுக்கு எதிரான டிஜிட்டல் பாதுகாப்பு எனக் கூறப்படுகிறது.
இதனால், மீண்டும் இவர்களுக்கு திருமணம் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.