
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக மற்றும் மிகவும் இளம் வயதில் 5000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது.
ஸ்மிருதி மந்தனா சாதனை
இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளாக பிரதீகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். இந்த இணை இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறிய ஸ்மிருதி மந்தனா, இன்றையப் போட்டியில் அரைசதம் விளாசி அசத்தினார். மறுமுனையில் நிதானமாக விளையாடி வரும் பிரதீகா ராவலும் அரைசதம் கடந்து அசத்தினார்.
இன்றையப் போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாகவும், மிகவும் இளம் வயதிலும் 5000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். 112 இன்னிங்ஸ்களில் ஸ்மிருதி மந்தனா 5000 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார்.
இந்திய அணி 25 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 150 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.
அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 66 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இதையும் படிக்க: ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.