
மகளிர் உலகக் கோப்பையில் இங்கிலாந்து, பாகிஸ்தான் போட்டியில் மழை குறுக்கிட்டது. பின்னர், மழை நின்றதால் போட்டி 31 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
பின்னர், இங்கிலாந்து அணி 31 ஓவர்களில் 133/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சார்லி டீன் 33 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் கேப்டன் ஃபாதிமா சனா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இலங்கையில் நடைபெறும் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணியின் போட்டி இன்று மதியம் 3 மணிக்குத் தொடங்கியது.
25 ஓவர்களில் இங்கிலாந்து அணி 79 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியதுபோது மழை குறுக்கிட்டது.
டிஎல்எஸ் விதியின்படி பாகிஸ்தான் அணிக்கு 31 ஓவர்களில் 113 ரன்கள் இலாக்காக நிரணயிக்கப்பட்டுள்ளது.
பேட்டிங் ஆடிவரும் பாகிஸ்தான் 6 ஓவர்களில் 34/0 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி தனது முதல் வெற்றியைப் பெறவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.