
மகளிர் உலகக் கோப்பையில் இங்கிலாந்து, பாகிஸ்தான் போட்டியில் மழை குறுக்கிட்டது.
இங்கிலாந்து அணி 97 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
இலங்கையில் நடைபெறும் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணியின் போட்டி இன்று மதியம் 3 மணிக்குத் தொடங்கியது.
25 ஓவர்களில் இங்கிலாந்து அணி 79 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
அதிகபட்சமாக ஹீதர் நைட் 18 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி சார்பில் கேப்டன் ஃபாதிமா சனா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
25 ஓவர்களில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில், மழை நின்றால் போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு 9.38க்குள் மழை நின்றால் ஆட்டம் தொடரும். இல்லையெனில் சமனில் முடிந்தத்தாக அறிவிக்கப்படும்.
இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியுற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.
எளிதாக வெற்றிப்பெற வாய்ப்பிருக்கும் இந்தப் போட்டியிலும் மழை குறுக்கிட்டு, முதல் வெற்றியைத் தட்டிப்பறித்துவிடும் போலிருக்கிறதென பலரும் சமூக வலைதளத்தில் பேசி வருகிறார்கள்.
இங்கிலாந்து அணியினர் ஓய்வறையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.