வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேசம் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி சட்டோகிராமில் இன்று (அக்டோபர் 31) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 151 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் தன்சித் ஹாசனை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. சிறப்பாக விளையாடிய தன்சித் ஹாசன் 62 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, சைஃப் ஹாசன் 23 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ரோமாரியோ ஷெப்பர்டு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, ஜேசன் ஹோல்டர் மற்றும் கேரி பியர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன் மற்றும் ராஸ்டன் சேஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்
152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 16.5 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ராஸ்டன் சேஸ் மற்றும் அக்கீம் ஆகஸ்ட் அரைசதம் விளாசி அசத்தினர். ராஸ்டன் சேஸ் 29 பந்துகளில் 50 ரன்கள் (5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), அக்கீம் 25 பந்துகளில் 50 ரன்கள் (ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்கள்) எடுத்தனர். அமீர் ஜாங்கோ 23 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
வங்கதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நசும் அகமது மற்றும் மஹெதி ஹாசன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. ராஸ்டன் சேஸ் ஆட்ட நாயகனாகவும், ரோமாரியோ ஷெப்பர்டு தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Summary
West Indies won the third T20I against Bangladesh by 5 wickets.
இதையும் படிக்க: ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய வங்கதேசம்!

நியூசிலாந்தை வீழ்த்திய வங்கதேசம்; சமனில் ஒருநாள் தொடர்!
மகளிா் ஒருநாள் கிரிக்கெட்: தொடரை வென்றது ஆஸ்திரேலியா

ஜாா்ஜியா அதிரடி: டி20 தொடரை முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


