/

முதல் டி20: இருவர் அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.

News image
ஹாரி டெக்டார் மற்றும் லோர்கான் டக்கர்- படம் | அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Updated On :17 செப்டம்பர் 2025, 2:42 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அயர்லாந்து முதலில் விளையாடியது.

இருவர் அரைசதம்; 197 ரன்கள் இலக்கு

முதலில் விளையாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பால் ஸ்டிரிலிங் மற்றும் ராஸ் அடாய்ர் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். ஸ்டிரிலிங் 22 பந்துகளில் 34 ரன்கள் (ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள்), ராஸ் அடாய்ர் 25 பந்துகளில் 26 ரன்கள் (3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

அதன் பின், ஹாரி டெக்டார் மற்றும் லோர்கான் டக்கர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். லோர்கான் டக்கர் 36 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியாக விளையாடிய ஹாரி டெக்டார் 36 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இங்கிலாந்து தரப்பில் ஜேமி ஓவர்டான், லியம் டாஸன் மற்றும் அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

summary

Ireland, batting first in the first T20I against England, scored 196 runs for the loss of 3 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.