காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஆட்ட நாயகன் விருதை எம்.எஸ். தோனிக்கு சமர்ப்பித்த முகுல் சௌதரி!

லக்னௌ அணியின் இளம் வீரர் முகுல் சௌதரி பேட்டி குறித்து...

Lucknow Super Giants' Mukul Choudhary celebrates the win over Kolkata Knight Riders in the Indian Premier League cricket match between Kolkata Knight Riders and Lucknow Super Giants in Kolkata, India, Thursday, April 9, 2026. (AP Photo/Bikas Das)

வெற்றிக் களிப்பில் முகுல் சௌதரி. - படம்: ஏபி

Published On :

லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய இளம் லக்னௌ வீரர் முகுல் சௌதரி இந்த ஆட்ட நாயகன் விருதை தனது முன்மாதிரி எம்.எஸ். தோனிக்கு சமர்ப்பித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

முதலில் பேட்டி செய்த கேகேஆர் அணி 20 ஓவர்களில் 181/ 4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய லக்னௌ அணி 20 ஓவர்களில் 182/7 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் 16 ஓவர்களில் 128 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் ஆனதும் போட்டி முடிந்துவிட்டதென பலரும் நினைத்தார்கள். ஆனால், இளம் வீரர் முகுல் சௌதரி 27 பந்துகளில் 54 ரன்களை அடித்து நம்பமுடியாத இன்னிங்ஸை விளையாடினார்.

இந்தப் போட்டியில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்தினார். முகுல் சௌதரி ஆட்ட நாயகன் விருது வென்ற பிறகு பேசியிருப்பதாவது:

எம்.எஸ். தோனி ஆட்டத்தை எப்படி முடிப்பார் என பார்ப்பது வழக்கம். அவரைப் போலவே அதே இடத்தில் களமிறங்குகிறேன். எனது இளம் பருவத்தில் அவர் மிகவும் என்னைப் பாதித்துள்ளார். இந்தப் போட்டியை அவருக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.

Summary

Mukul Choudhary Dedicates Ruthless Knock Vs KKR To 'Idol' MS Dhoni.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.