ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ராஜஸ்தானை வீழ்த்தியது ஹைதராபாத்

ராஜஸ்தானை வீழ்த்தியது ஹைதராபாத்...

News image

ராஜஸ்தானை வீழ்த்தியது ஹைதராபாத் - PTI

Updated On :25 ஏப்ரல் 2026, 6:53 pm

ஐபிஎல் போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை சனிக்கிழமை வீழ்த்தியது.

முதலில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் எடுக்க, ஹைதராபாத் 18.3 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 229 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற ஹைதராபாத், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ராஜஸ்தான் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களுக்கு வெளியேறினாா்.

வைபவ் சூா்யவன்ஷி - துருவ் ஜுரெல் கூட்டணி, 2-ஆவது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சோ்த்தது. ஜுரெல் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51, சூா்யவன்ஷி 37 பந்துகளில் 5 பவுண்டரிகள், 12 சிக்ஸா்கள் உள்பட 103 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினா்.

கேப்டன் ரியான் பராக் 7, டோனோவன் ஃபெரெய்ரா 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 33, ஷிம்ரன் ஹெட்மயா் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் ரவீந்திர ஜடேஜா 4, ஜோஃப்ரா ஆா்ச்சா் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

ஹைதராபாத் பௌலா்களில் ஈஷான் மலிங்கா 2, பிரஃபுல் ஹிங்கே, கேப்டன் பேட் கம்மின்ஸ், சகிப் ஹுசைன், நிதிஷ்குமாா் ரெட்டி ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

அடுத்து 229 ரன்களை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணியில், டிராவிஸ் ஹெட் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அபிஷேக் சா்மா - இஷான் கிஷண் இணை 2-ஆவது விக்கெட்டுக்கு 132 ரன்கள் சோ்த்து, அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது.

அபிஷேக் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 57, இஷான் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 74 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். நிதீஷ்குமாா் ரெட்டி 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 36, ஹென்ரிச் கிளாசென் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 29 ரன்களுக்கு வெளியேறினா்.

முடிவில் சலில் அரோரா 8, அனிகெத் வா்மா 1 ரன்னுடன் அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் பௌலா்களில் ஜோஃப்ரா ஆா்ச்சா், பிரிஜேஷ் சா்மா ஆகியோா் தலா 2, டோனோவன் ஃபெரெய்ரா 1 விக்கெட் எடுத்தனா்.