இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் சாதனையை ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முறியடிக்கவுள்ளார்.
வங்கதேச அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவின் சாதனையை மிட்செல் ஸ்டார்க் முறியடிக்க காத்திருக்கிறார். இதுவரை 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மிட்செல் ஸ்டார்க் 433 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, மிட்செல் ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் கபில் தேவின் அதிக விக்கெட்டுகள் சாதனையை முறியடிப்பார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் மிட்செல் ஸ்டார்க் முதலிடத்தில் உள்ளார். அவர் 8 போட்டிகளில் 46 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் ஷேன் வார்னே (708), நாதன் லயன் (567), கிளன் மெக்ராத் (563) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். அந்த வரிசையில் 433 விக்கெட்டுகளுடன் மிட்செல் ஸ்டார்க் நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Australian fast bowler Mitchell Starc is set to break the record held by former Indian captain Kapil Dev.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெஸ்ட் கேப்டன் பொறுப்பு மிகவும் கடினமானது: ஜோ ரூட்

வைபவ் சூர்யவன்ஷி குறித்து அதிகம் பேச விரும்பவில்லை: கபில் தேவ்

“16 வயதில் சச்சினை நினைவுபடுத்துகிறார் சூர்யவன்ஷி” - கபில்தேவ் புகழாரம்

சூர்யவன்ஷியிடம் அதிகம் எதிர்பார்ப்பது தவறு: கபில் தேவ்
விடியோக்கள்

சர்க்கரை உண்மையிலேயே தவிர்க்கப்பட வேண்டியதா? | Health Care | Lifestyle




