ஆவணி மாத பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்புஉச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

இந்தியா - இலங்கை டெஸ்ட்: இரண்டாம் நாளின் முதல் செஷனை விழுங்கிய மழை!

இந்தியா - இலங்கை டெஸ்ட்டின் இரண்டாம் நாளிலும் மழையின் குறுக்கீடு குறித்து...

News image

மழையினால் மூடப்பட்டுள்ள காலே கிரிக்கெட் திடல். - AP Photo / Eranga Jayawardena

Updated On :16 ஆகஸ்ட் 2026, 12:43 pm IST

இந்தியா - இலங்கை டெஸ்ட்டின் இரண்டாம் நாளின் முதல் செஷனை மழை விழுங்கிவிட்டது. இந்திய ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.

காலேவில் நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாளில் 73 ஓவர்களில் 288/2 ரன்கள் குவித்திருந்தது. முதல் நாளிலும் மழையின் குறுக்கீடு இருந்தது.

முதல் நாளில் தேவ்தத் படிக்கல் 131* ரன்கள் குவித்து அசத்தினார். இவருடன் ரிஷப் பந்த் 21 ரன்களுடன் இரண்டாம் இன்னிங்ஸில் விளையாட தயாராக இருக்கிறார்.

இரண்டாவது நாளான (ஆக.16) இன்று காலை முதல் மீண்டும் இலங்கையில் மழை பெய்து வருவதால் போட்டி நடைபெறாமலே சென்றது. மதிய உணவு இடைவேளை விரைவாக எடுக்கப்பட்டு முதல் செஷன் முடிக்கப்பட்டது.

தற்போது, மழைப் பொழிவு நின்றிருப்பதால், போட்டி விரைவில் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. காயத்தினால் வெளியேறிய கே.எல். ராகுல் இன்று பேட்டிங் செய்வார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

கே.எல். ராகுல் 77 ரன்களுடன் காயத்தினால் வெளியேறினார். இன்று இந்திய அணி முழுவதும் விளையாடினால் 400-500 ரன்களை எட்டுமென கணிக்கப்படுகிறது.

Summary

Rain washes out opening session, India remain on 288/2 at lunch on day 2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.